பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி மலை ரயிலுக்கு புதிய பெட்டிகள் வரவு

Added : பிப் 10, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம் : சென்னையில் உள்ள, ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான, ஐ.சி.எப்.,ல் இருந்து, ஊட்டி மலை ரயிலுக்கான பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, தினமும் மலை ரயில் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது.பயணியர் வரத்து அதிகரித்ததால், ஊட்டி- - குன்னுார் இடையே, கூடுதலாக ரயில் சேவை இயக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.இதற்காக, சென்னை, பெரம்பூரில் உள்ள, ஐ.சி.எப்.,ல் இருந்து, புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட, ஏழு பெட்டிகள், ரயில் மூலம், நேற்று முன்தினம், மேட்டுப்பாளையத்திற்கு சென்றன.

மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: குன்னுார் - -ஊட்டி இடையே மலை ரயில் இயக்குவதற்காக, 28 பெட்டிகள், 'ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரை, 15 பெட்டிகள் வந்துள்ளன.பெட்டிகளில் பயணம் செய்யும் பயணியர், இருபக்கமும், இயற்கை காட்சிகளை பார்க்கும் வகையில், கண்ணாடி ஜன்னல்கள் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு சீட்டுக்கும், இடைவெளி பெரிய அளவில் உள்ளது. மேலும், பாட்டு கேட்க, 'ஸ்பீக்கர்'களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X