பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் தேவை

Added : பிப் 10, 2020
Advertisement

புவனகிரி : புவனகிரி தாலுகா, கிருஷ்ணாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதிடைகின்றனர்.

புவனகிரி தாலுகா, கிருஷ்ணாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில், கிருஷ்ணாபுரம், தென்கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், நத்தமேடு, ஜெயங்கொண்டான், குமுடிமூலை, எல்லைக்குடி, மருதுார், கொளக்குடி உள்ளிட்ட சுற்று பகுதி கிராமகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கின்றனர். தற்போது 270 மாணவர்கள் உள்ளனர்.பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த போர்வெல் பழுதடைந்ததால் அது அகற்றப்பட்டு, மினி போர்வெல் அமைக்கப்பட்டது.

இந்த போர்வெலை மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பயன் படுத்துகின்றனர். இதனால் குடிநீர் பற்றாக்குறை உள்ளது.பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள மதிற்சுவர், சத்துணவுக்கூடம், கழிப்பறைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால் மாணவிகள் கடும் அவதிடைகின்றனர்.எனவே கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளையும், பழுதடைந்துள்ள கட்டடங்களையும் சரி செய்ய வேண்டும். இப்பள்ளியில் 450க்கும் மேற்பட்டவர்கள் படித்தனர்.

அடிப்படை வசதிகள் இல்லாததால், இங்கு படித்த மாணவர்கள், சிதம்பரம், புவனகிரி மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதி பள்ளிகளுக்கு சென்று விட்டனர்.வரும் கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X