பொது செய்தி

தமிழ்நாடு

சேர்மன்களுக்கு வழங்க வேண்டிய ஜீப் பழுது; மக்கள் பணி மேற்கொள்வதில் சிக்கல்

Added : பிப் 10, 2020
Advertisement

கம்மாபுரம் : ஒன்றிய சேர்மன்களுக்கு 'ஜீப்' வழங்காததால், மக்கள் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி, உள்ளாட்சி தேர்தல் விதி நடப்பில் வந்ததால், விருத்தாசலம், கம்மாபுரம் உட்பட 13 ஒன்றிய சேர்மன்களுக்கு வழங்கப்பட்ட ஜீப்கள் ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து, தேர்தலுக்கு கோர்ட் இடைக்கால தடை விதித்ததால், இந்த ஜீப்கள் பயன்பாடின்றி நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், பெரும்பாலான வாகனங்கள் பழுதடைந்து விட்டன.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, ஒன்றி சேர்மன்கள் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் ஒன்றிய ஊராட்சிகளில், சாலை வசதி மற்றும் பராமரிப்பு, குடிநீர் வினியோக கட்டுமானப் பணி, ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டடங்கள் கட்டுதல் உள்ளிட்ட நலத்திட்ட பணிகளை பார்வையிட ஜீப் மிக அவசியம்.பெரும்பாலான ஜீப்கள் பழுதடைந்துள்ளதால், கம்மாபுரம் ஒன்றிய சேர்மன் உள்பட பலருக்கு ஜீப் வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் மக்கள் பணி ஆற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயங்க கூடிய நிலையில் இருந்த ஒரு சில ஜீப்கள் மட்டும், சேர்மன்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X