வந்தவாசி : சல்லேகன் விரதமிருந்த, 95 வயது ஜெயின் முதியவர் மரணமடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பறம்பூரைச் சேர்ந்தவர், சிம்மசந்திர ஜெயின் சாஸ்திரியார், 95; தமிழ்நாடு ஜெயின் சங்க முன்னாள் செயலர். இவரது மனைவி சரஸ்வதி இறந்து விட்டார். இவருக்கு, இரு மகள்கள் உள்ளனர்.சமண மதத்தை பின்பற்றி வந்த அவர், மோட்சமடைய, கடந்த மாதம், அவரது சொந்த கிராமத்தில், சல்லேகன் விரதம் மேற்கொள்ள திட்டமிட்டார்.
கடந்த, 7ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த விசாகாச்சாரியார் தபோ நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், அங்கு விரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அவர் மரணமடைந்தார். இதையடுத்து, தேங்காய் நாரில், அவரது உடல் எரியூட்டப்பட்டது.