கடலுார் : கடலுார் அருகே குழந்தைகள் காப்பகத்தில் இருந்து மாயமான சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடியில், 'புளூ ேஹாம்' என்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவாங்கூரை சேர்ந்த செந்தில்குமார் மகன் செந்தமிழ்ச்செல்வன், 14; மற்றும் வைடிப்பாக்கத்தை சேர்ந்த காசிநாதன் மகன் விநாயகமூர்த்தி, 12 ஆகியோர் தங்கி, முறையே 8 மற்றும் 6ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 8 ம் தேதி இரவு, விடுதி காப்பாளர் ஆண்ட்ரோஸ்ராஜிடம் சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக கூறி, சென்றனர். பின்னர் திரும்பவில்லை. இது குறித்து விடுதி காப்பாளர் அளித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன இருவரையும் தேடி வருகின்றனர்.