அரசியல் செய்தி

தமிழ்நாடு

தலைமை பொறியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை : பொதுப்பணி துறையின் கட்டடங்கள் பிரிவில், தலைமை பொறியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.

பொதுப்பணி துறையில், கட்டடங்கள், நீர்வளத் துறை, நீராய்வு நிறுவனம், நீர்வள ஆய்வு மையம், பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், கொதிகலன் இயக்கம் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில், கட்டடங்கள் பிரிவு வாயிலாக, 35 அரசு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டி கொடுக்கப்படுகின்றன. அரசு மருத்துவ மனைகள், கலெக்டர் அலுவலகங்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் பங்களாக்கள், அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளிட்டவை பராமரிக்கப்படுகின்றன.
கட்டடங்கள் பிரிவின் மருத்துவ கோட்டம் வாயிலாக, அரசு மருத்துவ கல்லுாரிகள், மருத்துவமனைகள், மருத்துவ கிடங்குகள் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. நீர்வளத் துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, ஆராய்ச்சி, அணைகள் இயக்ககம் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளுக்கு, தலைமை பொறியாளர்கள் உள்ளனர்.கட்டடங்கள் பிரிவில், தலைமை பொறியாளர்கள் எண்ணிக்கை, மிகவும் குறைவாகவே உள்ளது. வேளாண்மை, நீதி, விளையாட்டு, வருவாய், தொல்லியல், ஹிந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு, அதிகளவில் கட்டடங்கள் கட்ட வேண்டியுள்ளது.

இப்பிரிவுகளுக்கு, அயல் பணி அடிப்படையில், கண்காணிப்பு பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை பொறியாளர்கள் தனியாக இல்லாததால், பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. எனவே, கட்டுமான பணிகளை விரைவுப்படுத்தும் வகையில், கட்டடங்கள் பிரிவில், தலைமை பொறியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது, முதல்வர் இ.பி.எஸ்.,சின் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X