பொது செய்தி

தமிழ்நாடு

கலாசார புத்தகம் மத்திய அரசு வெளியீடு

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை : ஒவ்வொரு மாநில கலாசாரம் மற்றும் பண்பாட்டு தகவல்கள் அடங்கிய, தொகுப்பு புத்தகத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும், பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வி துறைகளில், மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக, ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டு தகவல்கள் அடங்கிய தொகுப்பு புத்தகத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது. தொகுப்பு புத்தகத்தில், மாநில கலாசாரம், பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், நடனம், முக்கிய இடங்கள், முக்கிய தலைவர்கள், நினைவு சின்னங்கள், விழாக்கள் போன்றவை குறித்த தகவல்கள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.

பெரும்பாலும், மாநில அளவில் பிரபலமாக விளங்கும் கோவில்கள் மற்றும் அதன் வரலாறுகள், வண்ண புகைப்படத்துடன், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகத்தை, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளி மாணவர்களும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி மாணவர்களும் வாங்கி பயன்படுத்தலாம் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X