பொது செய்தி

தமிழ்நாடு

நகரில் ஒருவழிப் பாதை திட்டம்: 'பசுமை விருதை குழு' தீர்மானம்

Added : பிப் 10, 2020
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில், வரும் 17ம் தேதி முதல், ஒருவழிப் பாதையாக நடைமுறைப்படுத்துவது குறித்து, பசுமை விருதை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருத்தாசலத்தில் சாலை பாதுகாப்பு குறித்து 'பசுமை விருதை குழு' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக சப் கலெக்டர் பிரவீன்குமார், துணை தலைவராக கலைச்செல்வன் எம்.எல்.ஏ., உறுப்பினர்களாக வருவாய்த்துறை, நகராட்சி, நெடுஞ்சாலை, மின்வாரியம், இந்து சமய அறநிலையத்துறை, போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இக்குழு கூட்டம், விருத்தாசலம் சப் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நேற்று நடந்தது. கலைச்செல்வன் எம்.எல்.ஏ., போலீஸ் டி.எஸ்.பி., இளங்கோவன், தாசில்தார் கவியரசு, இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.அதில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள ஜங்ஷன் சாலை, கடைவீதி, காய்கறி மார்க்கெட் சாலை ஆகியவற்றை ஒரு வழிப்பாதையாக அமைப்பது, சாலையின் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களை ஏதேனும் ஒரு பக்கமாக நிறுத்தி அறிவுறுத்துவது, சாலைகளின் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு குறியீடுகள் அமைப்பது எனவும், இவற்றை வரும் 17ம் தேதி முதல் செயல்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X