பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் நிலை காவலர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி

Added : பிப் 10, 2020
Advertisement

கடலுார் : கடலுாரில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வானவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு துறை வீரர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, கடலுாரில் நடந்தது. இதில், தமிழ்நாடு காவல் துறையில் ஆயுதப் படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில், இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 468 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடலுார் காவலர் திருமண மண்டபத்தில் நேற்று, நடந்தது. எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவின்படி, மாவட்ட காவல் துறை அலுவலக நிர்வாக அலுவலர்கள் அன்பழகன், மணிமொழி, சரஸ்வதி ஆகியோர் தலைமையில், அமைச்சு பணியாளர்கள் குழுவினர், சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், கடலுார் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X