பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றுப்படுத்துனர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : பிப் 10, 2020
Advertisement

கடலுார் : கடலுார் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருக்கும், இளஞ்சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துனர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் கடலுார் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருக்கும் இளஞ்சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துனர்கள் மூலம் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்கப்பட உள்ளது.இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப்பட்டம் பெற்ற நபர்கள், விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல் மற்றும் கைப்பேசி எண்ணுடன், செய்தி வெளிவந்த 15 நாட்களுக்குள் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுனர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, வருகையின் அடிப்படையில் (ஒரு ஆண்டில் 60 நாட்களுக்கு மிகாமல் ) மதிப்பூதியம் வழங்கப்படும். ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.மேலும் விவரம் வேண்டுவோர் அரசினர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் கண்காணிப்பாளர், அரசினர் கூர்நோக்கு இல்லம், அண்ணாமலை நகர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம், தீபன் நகர் அருகில், கடலுார் 607001 என்ற முகவரிக்கு அனுப்பு வேண்டும். தொலைபேசி எண் 04142-290350. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X