வாகன நிறுத்தமாக மாறும் பஸ் நிறுத்தம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாகன நிறுத்தமாக மாறும் பஸ் நிறுத்தம்

Added : பிப் 10, 2020
Share

சிதம்பரம் : சிதம்பரம் கஞ்சித்தொட்டி பஸ் நிறுத்தம் வாகன நிறுத்தமாக மாறுவதால் இருக்கைகள் உடைக்கப்படுகிறது. காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சிதம்பரத்தில் மேலவீதியும், வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள கஞ்சித்தொட்டி, எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். பஸ் நிறுத்தம் அங்கேயே இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனால், எம்.பி., தொகுதி நிதியில் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகளுடன் பெரிய பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

தற்போது இந்த பஸ் நிறுத்தத்தில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதும், இரவு நேரத்தில் குடி பிரியர்கள் பாராக பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதால் அதில் உள்ள இருக்கைகளை வாகனத்தால் இடித்து பெயர்த்து விடுகின்றனர். இதனால் பஸ் ஏற காத்திருக்கும் பயணிகளுக்கு போதிய இடமின்றி தவித்து வருகின்றனர். ஆகவே நகராட்சி நிர்வாகம் காவல் துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கு வாகனங்கள் நிறுத்துவோர், மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X