ஒமர் அப்துல்லா கைதுக்கு எதிர்ப்பு; சுப்ரீம் கோர்ட்டில் தங்கை வழக்கு

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி : தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது தங்கை சாரா அப்துல்லா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்டில் ரத்து செய்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா, ஏற்கனவே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோரும், சமீபத்தில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை, ஒரு ஆண்டுக்கு எந்த விசாரணையும் இன்றி, சிறையிலோ, வீட்டுக்காவலிலோ வைத்திருக்க முடியும். இந்நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒமர் அப்துல்லா சிறைபிடிக்கப்பட்டதை எதிர்த்து, அவரது தங்கை சாரா அப்துல்லா, உச்ச நீதிமன்றத்தில் இன்று(பிப்.,10) மனு தாக்கல் செய்தார்.

சாரா சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, இந்த மனுவை அவசரமாக விசாரிக்கும்படி முறையிட்டார். அவரது கோரிக்கையை, நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு ஏற்று, வழக்கை அவசரமாக விசாரிக்க பட்டியலிடும்படி பதிவாளருக்கு உத்தரவிட்டது.

சாரா அப்துல்லா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஒமர் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைபிடிக்க எந்த முகாந்திரமும் இல்லை; அதற்கு உரிய சரியான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை. எம்.பி., முதல்வர், மத்திய அமைச்சர் போன்ற முக்கிய பதவிகளை வகித்த ஒருவரை, இந்த சட்டத்தின் கீழ் சிறைபிடிப்பது அரிதான விஷயம்.

நாட்டில், ஒவ்வொரு தனி நபரின் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. எனவே, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒமர் அப்துல்லா சிறைபிடிக்கப் பட்டதை ரத்து செய்து, அவரை விடுவிக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11-பிப்-202019:26:39 IST Report Abuse
Malick Raja வினை வைத்தவன் வினையை அறுவடை செய்தே ஆகவேண்டும் .. முற்பகல் செயின் பிற்பகல் விளையும் . அரசன் அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் .. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு .. இதெல்லாம் சும்மாவா போகும் வினைக்கு தினை கிடைப்பதில்லை . தெறிக்கவிடுவதகாத தெரியும் நாளைய நிலை அறியாத அறிவிலிகள் வெளிப்பாட்டுக்கு அளவே இல்லை
Rate this:
Share this comment
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
11-பிப்-202019:02:31 IST Report Abuse
Rasheel 70 ஆண்டு காலமாக சிகுலர் அரசியல்வாதிகள் நம்மை எப்படி ஏமாற்றி உள்ளனர் காஷ்மீரி மாணவன் இந்தியா முழுவதும் சேர்ந்து படிக்கலாம். ஆனால் மற்ற மாநில மாணவர்கள் அங்கு சேர்ந்து படிக்கச் முடியாது. காஷ்மீரி இந்தியா முழுவதும் சொத்துக்களை வாங்கலாம். ஆனால் மற்ற மாநில மக்கள் அங்கு ஒரு சென்ட் நிலம் வாங்க முடியாது. காஷ்மீரி இந்தியா முழுவதும் வணிகம் செய்யலாம். ஆனால் மற்ற மாநில மக்கள் அங்கு வணிகம் செய்ய லைசென்ஸ் கிடைக்காது. ஆண்டுக்கு மத்திய அரசு உதவி 90000 கோடி ரூபாய். ஆனால் வளர்ச்சி கிடையாது. தாழ்த்த பட்டவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. முக்கியமான தொழில் கல் எறிவது. பொது சொத்தை சேதப்படுத்துவது. இதை எல்லாம் ஒரு மதம் சிகுலர் அரசியல்வாதிகள் நம்மை எப்படி ஏமாற்றி உள்ளனர்? வெட்க கேடு
Rate this:
Share this comment
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
11-பிப்-202017:46:39 IST Report Abuse
S.kausalya சாதா குடும்ப பெண்கள் மட்டும் தான் முக்காடு அணிவார்கள் போல. இவங்க எல்லாம் சினிமா நடிகைகள் போல போஸ் கொடுக்கறாங்க. இவங்களை எல்லாம் மத தலைவர்கள் கேள்வி கேட்க முடியாது போல. அது சரி அவங்க இஷ்டம் அவங்க உரிமை.
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
12-பிப்-202005:40:17 IST Report Abuse
 Muruga Velகவுசு அவர் கணவர் இந்து .. அவர் வீட்டில் எல்லாமே கலப்பு திருமணம் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X