விலையில்லா சைக்கிள்: எம்.எல்.ஏ., வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விலையில்லா சைக்கிள்: எம்.எல்.ஏ., வழங்கல்

Added : பிப் 10, 2020
Share

பரங்கிப்பேட்டை : அரசு பள்ளி மாணவர்கள், நன்கு படித்து உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் என அ.தி.மு.க., செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., பேசினார்.

பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மேல்நிலைப்பள்ளியில், 8 அரசு மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த, 879 மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், சேர்மன் கருணாநிதி, ஒன்றிய செயலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை, சுந்தரி வரவேற்றார்.கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., 879 மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், 'மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த, முன்னாள் முதல்வர் ஜெ., பல திட்டங்களை நிறைவேற்றினார். அரசு மாணவர்கள், நன்கு படித்து உயர்ந்த பதவிக்கு வரவேண்டும். உங்கள் பெற்றோருக்கும், பெருமை சேர்க்க வேண்டும்' என்றார்.விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் மோகன், பள்ளி தாளாளர் லீலாவதி, நகர செயலர்கள் மாரிமுத்து, விஜயன், மாவட்ட மீனவரணி செயலர் வீராசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், ரயில்வே பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் ரங்கம்மாள், முன்னாள் கூட்டுறவு வங்கி துணை தலைவர் தமிழரசன், மலைமோகன், தன ஜெயராமன், ஜெய்சங்கர், ராஜேஷ் துகார், இக்பால் பங்கேற்றனர்.தலைமை ஆசிரியர் ராஜசேகர் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X