ஷாஹீன் பாக் போராட்டம்: அரசுக்கு நீதிமன்றம், 'நோட்டீஸ்'

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஷாஹீன்_பாக், போராட்டம், அரசுக்கு, நீதிமன்றம், நோட்டீஸ்

புதுடில்லி: 'குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டில்லி ஷாஹீன் பாக்கில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையை மறைத்து பேராட்டம் நடத்தக்கூடாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டில்லி ஷாஹீன் பாக் பகுதியில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பேராட்டம் நடந்து வருகிறது.


பாதிக்கிறது

இந்த போராட்டம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, 'ஷாஹீன் பாக் போன்ற பகுதியில், காலவரையின்றி போராட்டங்கள் நடத்தப்படுவது, பொது மக்களை கடுமையாக பாதிக்கிறது.

போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. 'ஆனால், அதற்கான இடத்தில் நடத்தப்பட வேண்டும். மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.


ஒத்தி வைத்தனர்

பின், இவ்விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு, டில்லி அரசு மற்றும் போலீசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, வழக்கை, வரும், 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


குழந்தை இறப்புநீதிமன்றம் விசாரணை

டில்லி ஷாஹீன் பாக் பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்து வரும் பேராட்டத்தில் கலந்து கொண்ட தம்பதியர், தங்கள் நான்கு மாத கைக்குழந்தையையும், உடன் அழைத்து சென்றனர். வீட்டுக்கு திரும்பும் வழியில், அந்த குழந்தை சமீபத்தில் இறந்தது.

இந்த விவகாரத்தை, தானாக முன் வந்து, உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசு மற்றும் டில்லி அரசுக்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
12-பிப்-202011:40:24 IST Report Abuse
Nallavan Nallavan ஒண்ணு செத்துட்டா ஓரிறைவன் ஒன்பது குடுப்பான் .... தொண்ணூறும் குடுப்பான் .... இதைத் தாமாக எடுத்துக்கிட்டு பிசி ஆயிருச்சாக்கும் நீதிமன்றம் ????
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
11-பிப்-202016:57:58 IST Report Abuse
konanki மாலிக் டெல்லியின் ஜனத்தொகை சுமார் 3 கோடி . ஷஃஹீன் பக போராட்டம் செய்பவர்கள் ஏவவளவு ஒரு 2 ,000 இருக்குமா . இந்த 2 ,000 பேர் சுமார் 3 கோடி மக்களை தொந்தரவு செய்யலாமா ? சௌதி ல சிறுபான்மை மக்கள் இந்த மாதிரி நடுரோட்டில் தொடர்ந்து போராட முடியமா?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-பிப்-202014:30:41 IST Report Abuse
Natarajan Ramanathan குழந்தையின் உயிரிழப்பை ஏற்படுத்திய பெற்றோர்களை ஏன் கைது செய்து வழக்கு பதியவில்லை என்று நீதிமன்றம் கேட்குமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X