பொது செய்தி

தமிழ்நாடு

தற்காலிக நெல் கொள்முதல் நிலையம்

Added : பிப் 10, 2020
Advertisement

புவனகிரி : புவனகிரி, கீரப்பாளையத்தில் திறந்த வெளி தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புவனகிரி தாலுகா மருதுார் சுற்றுப்பகுதி விவசாயிகள், தனியாரிடம் நெல் விற்பனை செய்ததால், உரிய காலத்தில் பணம் கிடைக்காமல் அவதிடைந்தனர். தற்போது தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டு, கடந்த மாதம் 23 ம் தேதியில் இருந்து 6 ம் தேதி வரை 6 ஆயிரத்து 804 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவை நெய்வேலி எம்.ஆர்.எம் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் பொதுரகம் குவிண்டால் ரூ.ஆயிரத்து 865 க்கும், சன்னரகம் குவிண்டால் ஆயிரத்து 905க்கும் விலை போனது. விவசாயிகளிடம் ஆதார், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி சேமிப்பு நகல் பெற்று நெல் விற்பனைக்கான தொகை வங்கி கணக்கில் செலுத்துவதால் விவசாயிகள் ஆர்வத்துடன் நெல் விற்பனை செய்கின்றனர்.புவனகிரி, சிதம்பரம் தாலுகா பகுதியில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை கீரப்பாளையம், புவனகிரியில் உள்ள திறந்தவெளி தற்காலிக நெல் கொள்முதல் கிடங்கில் இருப்பு வைத்து, அதன் பின் தேவையான இடங்களுக்கு நெல் மூட்டைகள் அனுப்புவது வழக்கம்.

இதனால் பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.ஆனால், இந்த ஆண்டு, இது வரை நெல் மூட்டைகளை இருப்பு வைக்க திறந்த வெளி தற்காலிக நெல் கொள்முதல் கிடங்கு அமைக்கப்படவில்லை. இதனால் நெல் கொள்முதல் செய்யப்படும் இடத்திலேயே மூட்டைகள் தேங்கியுள்ளது. திடீர் மழை பெய்தால், மூட்டைகளை பாதுகாக்க இங்கு போதிய வசதி இல்லை. இந்த வசதி உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்திற்கு மூட்டைகளை அனுப்பி வைக்க சம்மந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X