அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.8,501 கோடியில் 6 ரயில்வே திட்டங்கள் அறிவிப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை : 'தமிழகத்தில், காட்பாடி - விழுப்புரம் இடையே, இரண்டாவது ரயில் பாதை உட்பட, ஆறு ரயில்வே திட்டங்கள், 8,501 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்' என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில், ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து வெளியிடப்படுவதால், தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. 'டில்லியில் இருந்து முழு தகவல்கள் வந்ததும் தெரிவிக்கிறோம்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகளும் சமாளித்தனர். இந்நிலையில், 'தமிழகத்தில், 10 ரயில்வே திட்டங்களுக்கும், 10 ஆயிரம் ரூபாய் தான் நிதி ஒதுக்கீடு' என, தகவல்கள் வெளியாகின. சமூக வலை தளங்களிலும், இந்த தகவல் பரவியது.

இந்நிலையில், 'தமிழகத்தில் ஆறு திட்டங்கள், 8,501 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப் படும்' என, தெற்கு ரயில்வே நேற்று அறிவித்தது.நிதி ஒதுக்கீடு  காட்பாடி - விழுப்புரம் இடையே, 160.1 கி.மீ., இரண்டாவது பாதை, 1,601 கோடி ரூபாய்; சேலம் - கரூர் - திண்டுக்கல் இடையே, 160 கி.மீ., இரண்டாவது பாதை, 1,600 கோடி ரூபாயில் அமைக்கப் படும் ஈரோடு - கரூர் இடையே, 65 கி.மீ., இரண்டாவது பாதை, 650 கோடி ரூபாய்; தர்மாவரம் - பாகலா - காட்பாடி இடையே, 290 கி.மீ., இரண்டாவது பாதை, 2,900 கோடி ரூபாயில் அமைக்கப்படும் .

ஓசூர் - ஓமலுார் இடையே, 147 கி.மீ., இராண்டவது பாதை, 1,470 கோடி ரூபாயில் அமைக்கப்படும் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே, 4.3 கி.மீ., நான்காவது பாதை, 280 கோடி ரூபாய் என, மொத்தம், ஆறு திட்டங்களில், 826.4 கி.மீ., ரயில்பாதை, 8,501 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X