பாழாகும் 'நம்ம டாய்லெட்': பஸ் பயணிகள் அவதி

Added : பிப் 10, 2020
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பாழாகி வரும் நம்ம டாய்லெட் திட்ட கழிவறைகளை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து தினசரி 145க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கி வருகின்றன. சென்னை, சேலம், கோவை, ஈரோடு, பழனி, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் நலன் கருதி, பஸ் நிலைய வளாகத்தில் இலவச மற்றும் கட்டண கழிவறைகள் கட்டப்பட்டன.அதில், இலவச கழிவறையான 'நம்ம டாய்லெட்' தண்ணீர் பயன்பாடின்றி முடங்கி போனதால், பயணிகள் மட்டுமல்லாது போக்குவரத்து கழக ஊழியர்களும் கட்டணம் செலுத்தி, கழிவறையை பயன்படுத்தும் நிலை உள்ளது.

இந்நிலையில், சப் கலெக்டர் பிரவீன்குமார் கடந்த வாரம் இலவச கழிவறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பைப்லைன்கள் சீரமைக்கப்பட்டு, தண்ணீர் சப்ளை சீராக வழங்கப்பட்டது. ஆனால், ஓரிரு நாட்களில் தண்ணீர் பைப்லைன் துண்டிக்கப்பட்டதால் 'நம்ம டாய்லெட்' வளாகம் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் இலவச கழிவறையை பயன்படுத்த முடியாமல் பொது மக்கள், கட்டண கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, பஸ் நிலையத்தில் காட்சிப்பொருளான நம்ம டாய்லெட் திட்ட கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X