பொது செய்தி

தமிழ்நாடு

பாழாகி வரும் உரக்கூடம்

Added : பிப் 10, 2020
Advertisement

பெண்ணாடம் : பேரளையூர் ஊராட்சியில் பாழான மண்புழு உரக்கூடத்தை, பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் ஒன்றியம், பேரளையூர் ஊராட்சியில், கடந்த 10 மாதங்களுக்கு முன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி ரூ.ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் உரக்கூடம் அமைக்கப்பட்டது.மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து அதனை பதப்படுத்தி, மண்புழு உரம் உற்பத்தி செய்ய, 9 கான்கிரீட் தொட்டிகள் மற்றும் கீற்று கொட்டகை அமைக்கப்பட்டது. ஆனால் கட்டி முடித்த நாள் முதல் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. மண்புழு உரக்கூடம் முற்றிலும் பாழாகி, அரசு நிதி வீணாகிறது.எனவே, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு, மண்புழு உரம் தயாரிக்கும் பணியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X