உலர் களமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

Added : பிப் 10, 2020
Advertisement

மங்கலம்பேட்டை : விருத்தாசலம் - ஆலடி சாலையில், உளுந்து செடிகளை உலர வைப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.

விருத்தாசலம் - ஆலடி சாலையில் பஸ், லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இந்த சாலையோரம் உள்ள ப.எடக்குப்பம், பழையபட்டிணம், வீராரெட்டிக்குப்பம், குருவன்குப்பம், தே.கோபுராபுரம் உள்ளிட்ட கிராம விவசாயிகள், அறுவடை செய்த உளுந்து செடிகளை விருத்தாசலம் - ஆலடி சாலையில் உலர்த்தி வருகின்றனர்.இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி, இச்சாலையில், உளுந்து செடிகளை கொட்டி உலர வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X