பொது செய்தி

தமிழ்நாடு

இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழா

Added : பிப் 10, 2020
Share
Advertisement

பண்ருட்டி : பண்ருட்டி ரத்தனா பேட்மிட்டன் கிளப் சார்பில், 3ம் ஆண்டு இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

போட்டியில் 30 வயதுகுட்பட்ட, 30 வயதுக்கு மேற்பட்ட தலா 16 அணிகள் வீதம் 32 அணிகள் கலந்து கொண்டன. 30 வயதுக்குட்பட்டோர் அணியில் முதல் பரிசினை வேதமூர்த்தி-ஆனந்தராஜ் அணியும், இரண்டாம் பரிசை சதிஷ்குமார்-தமிழரசன், மூன்றாம் பரிசு ரவி-முருகவேல், நான்காம் பரிசு விஜி-சுமன் அணியினர் வென்றனர்.

முப்பது வயதுகுட்பட்டோர் அணியில் முதல் பரிசை பிரகாஷ்ராஜ்-வினோத், இரண்டாம் பரிசை ரஞ்சித்-திலீபன், மூன்றாம் பரிசை ஹரிஷ்-கவுதமன், நான்காம் பரிசை கிருபாகரன்-சர்ச்சில் அணியினர் பெற்றனர்.பரிசளிப்பு விழாவிற்கு, ரத்தனா பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாளாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி இயக்குனர் பாலகிருஷ்ணன், முதல்வர் ரவி வரவேற்றனர்.முதல் பரிசினை டி.எஸ்.பி., நாகராஜன், எஸ்.வி. ஜூவல்லர்ஸ் அருள், இரண்டாம் பரிசை ஐஸ்வர்யா ேஹாம் நீட்ஸ் ராஜ்மோகன், மூன்றாம் பரிசை வரதமான் ஜூவல்லரி மதன்சந்த், நான்காம் பரிசை மலர் இன்டர்நேஷனல் எழிலரசன் ஆகியோர் வழங்கினர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X