தமிழ்நாடு

அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்கள் பட்டியல் வெளியிட வலியுறுத்தல்! நகர் நல சங்கங்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் கோரிக்கை

Added : பிப் 10, 2020
Advertisement
அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்கள் பட்டியல் வெளியிட வலியுறுத்தல்! நகர் நல சங்கங்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் கோரிக்கை

கடலுார் : கடலுார் நகராட்சியில் அதிக சொத்துவரி மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என, நகர் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் கமிஷனருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலுார் நகராட்சியில் சொத்து வரி அதிகளவில் வசூலாகவில்லை. அதேபோல், வாடகையை வசூல் செய்ய முடியவில்லை. இதனால் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் போடக்கூட பணமில்லை. அடிப்படை வசதிகள் செய்து தருவது கேள்விக்குறியானது. அதையொட்டி சொத்து வரி வசூலிக்கவும், நகராட்சி கடைகளுக்கு வாடகை வசூலிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி கமிஷனர் எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக, நகர பகுதிகளுக்குள் இருக்கும் பல்வேறு நலச்சங்க நிர்வாகிகளை அழைத்து நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.

நகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர்நல அலுவலர் அரவிந்த ஜோதி, மேலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு நலச்சங்க நிர்வாகிகள் மருதவாணன், வெங்கிடேசன், ராதாகிருஷ்ணன், ஜானகிராமன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சொத்துவரி பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும். பொதுமக்கள் முன்வந்து வரி செலுத்தாததால்தான் நகர பகுதியில் அடிப்படை வசதிகளை நகராட்சி செய்து தர முடியவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

நகர் நலச்சங்க நிர்வாகிகள் பேசும்போது, 'குறைந்த வரி செலுத்துவோர்களால் தான் நகராட்சியே முடங்கியுள்ளது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் பார்த்தால் அதிகளவில் வரி பாக்கி வைத்துள்ளவர்களால் தான் நகராட்சி முடங்கி உள்ளது. அதிகளவில் பாக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலை நகராட்சி வெளியிட வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை தெரிய வரும். அவ்வாறு வெளியிட்டால் நாங்களும் சேர்ந்து வரியை வசூல் செய்கிறோம். நகர பகுதியில் அடிப்படை வசதிகளே செய்து தரப்படுவதில்லை. சாலைகள் படுமோசமாக உள்ளன.

தெரு விளக்குகள் எரிவதில்லை. பாதாள சாக்கடை திட்டம் குறித்து புகார் செய்ய வேண்டுமானால் கட்டணமில்லா தொலைபேசியை மக்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு செய்யப்படும் புகார்கள் மீது அன்றைக்கே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். மேலும், நகர பகுதில் செய்ய வேண்டிய அடிப்படை பணிகள் அடங்கிய 17 கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கமிஷனரிடம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X