பொது செய்தி

தமிழ்நாடு

9 சுங்கச் சாவடிகளுக்குரூ.404 கோடி கட்டணம்

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை : சுங்கச்சாவடிகளில், கட்டணம் வசூலிப்பதற்கான நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியுள்ளது.

தமிழகத்தில், 5,300 கி.மீ.,க்கு மேல், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிப்பதற்காக, 46 இடங்களில், சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில், கட்டணம் வசூலிப்பு பணியை மேற்கொள்ள, தனியார் நிறுவனங்களை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நியமிக்கிறது. இதற்கென குறிப்பிட்ட தொகையை, ஆண்டு கட்டணமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், பரனுார் சுங்கச்சாவடிக்கு, இந்த ஆண்டு ஒப்பந்த கட்டணமாக, 111 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது, சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடிக்கு, 16.70 கோடி ரூபாய்; புதுக்கோட்டை மாவட்டம், லெம்பலக்குடி, 11.75 கோடி; ராமநாதபுரம் மாவட்டம், போகலுார், 15.16 கோடி; விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாவடிக்கு, 92.59 கோடி ரூபாய். திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த நல்லுார் சுங்கச்சாவடிக்கு, 66.07 கோடி ரூபாய்; பட்டரை பெரும்புதுார்.

12.86 கோடி; மதுரை மாவட்டம், பூதக்குடி, 51.93 கோடி; திருநெல்வேலி மாவட்டம், வாகைக்குளம் சுங்கச்சாவடிக்கு, 25.96 கோடி ரூபாய், ஆண்டு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கட்டணம் வசூலிப்பு நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான பணி துவங்கியுள்ளது. இந்த ஒன்பது சுங்கச்சாவடிகள் வாயிலாக மட்டும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஆண்டுக்கு, 404 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X