அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏப்ரலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ; நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் தகவல்

Added : பிப் 10, 2020
Advertisement
 ஏப்ரலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ;  நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் தகவல்

'ஏப்ரல் மாதம், விடுபட்ட மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது; அதற்கு தயாராகுங்கள்' என, மாவட்ட நிர்வாகிகளுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

அ.தி.மு.க., வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தல் பணி குறித்தும், மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், நேற்று துவங்கியது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், காலையில், கரூர், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலுார் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாலையில், மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.அந்த மாவட்டங்களைச் சேர்ந்த, தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், ஒன்றிய செயலர்கள், நகரச் செயலர்கள், மாநகராட்சி பகுதி செயலர்கள் பங்கேற்றனர்.மாவட்ட நிர்வாகிகள் பட்டியலின்படி, கூட்டத்திற்கு வந்தவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே, போலீசார் உள்ளே அனுமதித்தனர். காலை, 10:00 மணிக்கு, கரூர் மாவட்ட நிர்வாகிகளுடனான, ஆலோசனை கூட்டம் நடந்தது.

கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., தலைமையில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைப்பு செயலர் விஸ்வநாதன், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடந்தது.ஒவ்வொரு மாவட்ட கூட்டமும், 20 - 30 நிமிடங்கள் வரை நடந்தது. கூட்டத்தில் பேசிய முதல்வர் மற்றும் துணை முதல்வர், ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிக வெற்றிகளை பெற்று தந்த, மாவட்ட நிர்வாகிகளுக்கு, வாழ்த்து தெரிவித்தனர்.

தோல்வி அடைந்த மாவட்டங்களில், தோல்விக்கான காரணங்களை கேட்டறிந்தனர்.தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள், தினகரன் தரப்பினர் ஓட்டுகளை பிரித்ததையும், சிறுபான்மையின மக்கள் எதிர்ப்பையும், தோல்விக்கு காரணங்களாக தெரிவித்தனர்.அதற்கு பதில் அளித்த முதல்வர், ''முதலில், நீங்கள் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு குறித்து விபரமாக அறிந்து கொள்ளுங்கள். இவை அனைத்தும், காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.''

இவற்றை, மக்களிடம் தெரியப்படுத்துங்கள். வீடுதோறும் துண்டுப் பிரசுரங்களை வினியோகியுங்கள்,'' என்றார்.முதல்வர் மற்றும் துணை முதல்வர் பேசுகையில், 'ஊரக உள்ளாட்சி தேர்தலில், தோல்வி அடைந்த இடங்களில், தோல்விக்கான காரணங்களை கண்டறியுங்கள்.'ஏப்ரல் இறுதியில், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலும், அனைத்து மாவட்டங்களில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடக்க உள்ளன.'இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்; அதற்கான பணிகளை துவக்குங்கள்' என்றனர். தொண்டர்கள், 'மிஸ்சிங்'அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த, ஆலோசனை கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு, ஆவின் மோர், இனிப்புகள் வழங்கப்பட்டன. கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சி அலுவலகம் வந்த நிலையில், தொண்டர்கள் யாரும் வரவில்லை. அழைக்கப்பட்டிருந்த நிர்வாகிகள் மட்டுமே வந்திருந்தனர்.

இன்றைய கூட்டம்!இன்று காலை, 10:00 மணிக்கு, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டங்கள்; மாலை, 4:30 மணிக்கு, கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, கடலுார் கிழக்கு, மத்தி, மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X