சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை : அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வுகளில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக, இடைத்தரகர் ஜெயகுமாருக்கு உதவியாக இருந்த, கார் ஓட்டுனர்கள் மூவர் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் இருவர் என, ஐந்து பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4; குரூப் - 2ஏ' மற்றும் வி.ஏ.ஓ., என்ற, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, பள்ளி கல்வி, வணிக வரி, நிதித் துறை ஊழியர்கள் என, 35 பேரை கைது செய்துள்ளனர்.இதன் தொடர் நடவடிக்கையாக, சென்னை, எண்ணுார், அன்னை சிவசாமி நகரைச் சேர்ந்த, ஓட்டுனர்களான கார்த்திக், 39; பெரம்பூர், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்த செந்தில்குமார், 36; சர்புதீன், 42, ஆகியோரை நேற்று கைது செய்துள்ளனர்.

போலீசாரிடம், கார்த்திக் அளித்துள்ள வாக்குமூலம்:சென்னை, பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்த, ஓம்காந்தன் என்பவர், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவர் வாயிலாக, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் பழக்கமானார். இவர்களிடம், கார் ஓட்டுனர்களாக வேலை பார்த்து வந்தோம். இருவரும், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், முறைகேடு செய்து வந்தனர். இது, எங்களுக்கு தெரிய வந்ததும், எங்களையும் சேர்த்துக் கொண்டனர்.

குரூப் - 4 மற்றும் குரூப் - 2ஏ தேர்வு விடைத்தாள்களை, ராமநாதபுரத்தில் இருந்து, தனியார் பார்சல் சர்வீஸ் வாகனத்தில், ஓம்காந்தன் மற்றும் சிலர், சென்னைக்கு ஏற்றி வந்தனர். இந்த வாகனத்தை, ஜெயகுமார், தன், 'இனோவா' காரில் பின்தொடர்ந்து வந்தார்.ஓம்காந்தன் உதவியுடன்தொடர்ச்சி 11ம் பக்கம்டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு ( முதல் பக்க தொடர்ச்சி) விடைத்தாள்கள் ஏற்றிச் சென்ற வாகனத்தை, டீ குடிப்பதற்காக இடையில் நிறுத்தினார். அப்போது, ஜெயகுமார், விடைத்தாள் பண்டல்களை கைப்பற்றி, காருக்குள்ளேயே சரியான விடைகளை எழுதி, மீண்டும் அந்த வாகனத்தில் வைத்து விட்டார்.

இதற்கு, நான் உட்பட மூன்று ஓட்டுனர்களும் உதவியாக இருந்தோம். எங்களிடம், ஓம்காந்தனின், 'மகிந்த்ரா சைலோ' காரை ஒப்படைத்திருந்தனர். நாங்கள், ஜெயகுமார் காருக்கு முன்னால் சென்று, எங்கேயாவது வாகன சோதனை நடக்கிறதா என்பது குறித்து, ஜெயகுமாருக்கும், ஓம்காந்தனுக்கும் தகவல் தெரிவிப்போம்.சாலைகளில், எந்த இடத்திலாவது போலீசார் நின்றால், ஓம்காந்தன் மற்றும் ஜெயகுமாரை உஷார்படுத்துவோம். இதுபோல, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, பல தேர்வுகளில் முறைகேடு செய்ய, உடந்தையாக இருந்துள்ளோம். இதற்காக, எங்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை தரப்பட்டுள்ளது.இவ்வாறு, கார்த்திக் கூறியுள்ளார்.

இதையடுத்து, இம்முறைகேடுகளுக்கு பயன்படுத்திய கார்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.இதற்கிடையில், 2016ல், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, வி.ஏ.ஓ., தேர்வு முறைகேடு தொடர்பாக, ஏற்கனவே, விழுப்புரம் மாவட்டம், ஆரியூர் வி.ஏ.ஓ., நாராயணன் என்பவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த வழக்கில், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 29, என்பவரை நேற்று கைது செய்தனர். அவர், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் உள்ள, படலையார்குளம் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றுகிறார்.

அதேபோல, சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, செந்தில்ராஜ், 36, என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, பனையஞ்சேரி வி.ஏ.ஓ.,வாக பணியாற்றுகிறார். இருவரும், ஜெயகுமாரிடம், தலா, 7 லட்சம் ரூபாய் கொடுத்து, தேர்ச்சி பெற்று, வி.ஏ.ஓ., பணியில் சேர்ந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X