எஸ்.சி., - எஸ்.டி., சட்ட திருத்தம் செல்லும்: உச்ச நீதிமன்றம்

Added : பிப் 10, 2020
Advertisement

புதுடில்லி : 'எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து, 2018ல், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும். மேலும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதற்கு முன் விசாரணையோ, போலீஸ் உயர் அதிகாரியின் அனுமதியோ தேவையில்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தாலே, அந்த புகாருக்கு உள்ளானோரை கைது செய்யும் வகையில், அந்த சட்டத்தில் விதிமுறைகள் இருந்தன. தீர்ப்புஇந்த சட்ட விதிமுறைகளால், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'உயர் அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமல், அரசு அதிகாரிகளையும், போலீஸ் உயர் அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் பொதுமக்களையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக் கூடாது' என, 2018, மார்ச்சில் தீர்ப்பளித்தது.

இதன்படி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், யாரையும் உடனடியாக கைது செய்ய முடியாது. உரிய விசாரணைக்கு பின்னரே கைது செய்ய முடியும் என்ற நிலை உருவானது.இந்த தீர்ப்பை எதிர்த்து, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பினர், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்த சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்தது. ஏற்கனவே இருந்த கடுமையான விதிமுறைகள் மீண்டும் சேர்க்கப்பட்டன. இதன்படி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டாலே, விசாரணையின்றி கைது செய்ய முடியும் என சட்ட திருத்தம் செய்யப்பட்டது.இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மத்தியஅரசு, சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது.


அப்பாவிகள் பாதிப்பு


அப்போது, ஏற்கனவே அளித்த தீர்ப்பை ரத்து செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 'வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், புகார் அளித்தாலே, கைது செய்யலாம். இந்த விவகாரத்தில், ஏற்கனவே இருந்த விதிமுறை தொடரும்' என, உத்தரவிட்டனர்.இந்நிலையில், 'வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு செய்த திருத்தம் செல்லாது' என உத்தரவிட வேண்டும். இந்த சட்ட திருத்தத்தால், அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

'உத்தர பிரதேசத்தில், கலவரத்தில் ஈடுபட்டோர் மீது புகார் கொடுக்கச் சென்றால், போலீசார் எங்கள் மீதே வழக்கு பதிவு செய்கின்றனர்' என, உச்ச நீதிமன்றத்தில், சில அமைப்புகள் சார்பில், மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், கடந்த ஆண்டு அக்டோபரில் விசாரணைக்கு வந்தன. அப்போது, 'வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.

இந்த சட்டத்தில் ஏற்கனவே என்ன நடைமுறை, விதிமுறை இருந்ததோ, அது தொடரும். 'அதே நேரத்தில், ஒருவரது பாதுகாப்பு மற்றும் தனி மனித சுதந்திரத்துக்கு தடை விதிக்கும் வகையிலான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை' என கூறி, விசாரணையை ஒத்தி வைத்தனர்.இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:ஒவ்வொரு குடிமகனும், தன் சக குடிமகனை பாரபட்சமின்றி சரிசமமாக, சகோதரத்துவத்துடன் நடத்த வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன், விசாரணையோ, உயர் போலீஸ் அதிகாரியின் அனுமதியோ தேவை இல்லை. மேலும், இந்த விவகாரத்தில், 2018ல், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், முகாந்திரம் இன்றி தொடரப்பட்ட வழக்கின் எப்.ஐ.ஆர்.,யை, நீதிமன்றம் ரத்து செய்யலாம்.இதில், முன் ஜாமினை தாராளமாக பயன்படுத்துவது, பார்லிமென்டின் நோக்கத்தை சிதைக்கும். இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X