சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 நாட்களுக்கு வறண்ட வானிலை

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை : 'நாளை முதல், மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பனிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஒரு வாரமாக, அதிகாலை நேர குளிர் குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால், இந்த மாத இறுதிக்குள், பனிக்காலம் முடிந்து, முன் இளவேனில் காலமான வெயில் காலம் துவங்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், இரண்டு நாட்களாக, வடக்கு கடலோர மாவட்டங்களின் சில இடங்களில், லேசான மழை பெய்து வருகிறது. இன்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல், மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X