பொது செய்தி

இந்தியா

ஏப்ரலுக்குள் வங்கிகள் இணைப்பு

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (6)
Advertisement
banks, april, merging, ஏப்ரல், வங்கிகள், இணைப்பு,

புதுடில்லி: இந்த வாரத்தில், 10 பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு குறித்த அறிவிப்பை அரசு வெளியிடும் என்றும், ஏப்ரல் மாதத்துக்குள், இணைப்பு நடவடிக்கைகள் முற்று பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு, 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து, நான்கு பெரிய வங்கிகளாக மாற்றுவது குறித்த அறிவிப்பை இந்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த அறிவிப்பு வெளியானதும், வங்கிகளின் நிர்வாக குழுக்கள் கூடி, இணைப்புக்கு தங்கள் ஒப்புதலை தெரிவிக்கும்.

மேலும் இந்த, 10 வங்கிகளும் இணைப்பு நடவடிக்கைகளை, ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அசோக் குமார் பிரதான், ''மத்திய அரசு இந்த வாரத்தில் வங்கிகளின் இணைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை, பஞ்சாப் நேஷனல் பேங்குடன் இணைக்கப்பட உள்ளன.சிண்டிகேட் பேங்க், கனரா வங்கியுடன் இணைக்கப்படும். அதேபோல், அலகாபாத் பேங்க், இந்தியன் வங்கியுடன் இணைக்கப்படும்.

இதைப் போலவே, ஆந்திரா பேங்க், கார்ப்பரேஷன் பேங்க் ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்படுகிறது.இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்குப் பின், பஞ்சாப் நேஷனல் பேங்க், எஸ்.பி.ஐ., வங்கிக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய வங்கியாக உருவெடுக்கும்.கனரா பேங்க், நான்காவது பெரிய வங்கியாக மாறும். யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஐந்தாவது பெரிய வங்கியாக உயரும்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-பிப்-202022:16:18 IST Report Abuse
Suresh Ramaiya That is called one India one Nation
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
11-பிப்-202017:00:22 IST Report Abuse
karutthu பஞ்சாப் நேஷனல் பேங்க், எஸ்.பி.ஐ., வங்கிக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய வங்கியாக உருவெடுக்கும்.கனரா பேங்க், நான்காவது பெரிய வங்கியாக மாறும். ........... ஆனால் இந்த வங்கியின் சேவை ஸ்டேட் பேங்க் சேவையைப் போல் மோசமாக இருக்கக்கூடாது ......
Rate this:
Share this comment
Cancel
Maharajan - Bangalore,இந்தியா
11-பிப்-202009:51:13 IST Report Abuse
Maharajan அதாவது பல வங்கிகளை இழுத்து மூடப் போறீங்க.. அப்படித்தானே??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X