தமிழக தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Added : பிப் 10, 2020
Advertisement

புதுடில்லி : உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என கூறி, தமிழக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற தேர்தல்கள் நடத்தப்படவில்லை. நகர்ப்புற தேர்தல்களையும் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், அதை மீறி, தேர்தல் தேதியை அறிவிக்காமல், மாநில தேர்தல் ஆணையம் அலட்சியமாக செயல்படுகிறது.நகர்ப்புற தேர்தலை உடனடியாக நடத்துவதாக, மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆனால், கிராமப்புற பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், நகர்ப்புற தேர்தல்களை கிடப்பில் போட்டு விட்டது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட, தமிழக தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள், பி.ஆர்.கவாய், சூர்யகாந்த ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X