வங்கி வாராக் கடன் குறைந்துள்ளது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Nirmala_Sitharaman, வங்கி, வாராக்கடன், குறைந்தது, நிர்மலா_சீதாராமன், முதலீடு,நிகர லாபம்

புதுடில்லி: ''மத்திய அரசின் நடவடிக்கைகளால், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் குறைந்துள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் லோக்சபாவில் பேசியதாவது: கடந்த, 2019, செப்., நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், 7.27 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, 2018 மார்ச்சில், 8.96 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

ஒன்றரை ஆண்டுகளில், சாதனை அளவாக, 2.03 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. நிகர லாபம்பொதுத் துறையைச் சேர்ந்த, 18 வங்கிகளில், 12 வங்கிகள், நடப்பு நிதியாண்டின், ஏப்.,- செப்., வரையிலான ஆறு மாதங்களில், நிகர லாபம் ஈட்டிஉள்ளன.

அத்துடன், ஏழரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, வாராக் கடனுக்கான நிதி ஒதுக்கீட்டு விகிதமும் அதிகரித்துள்ளது.பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகத் திறனை மேம்படுத்தி, இழப்பை குறைக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. வளர்ச்சிமேலும், வங்கிகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தி, வாராக் கடன் வசூல் முடுக்கி விடப்பட்டது.

இத்துடன், வங்கித் துறையின் அனைத்து நிலைகளிலும், தொழில்நுட்பங்களை புகுத்தியதன் விளைவாக, வாராக் கடன் பெருமளவு குறைந்துள்ளது. அத்துடன், முதலீடுகளை ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கைகளால், நடப்பு நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில், வங்கித் துறை வளர்ச்சி காணத் துவங்கிஉள்ளது. வரும் நிதியாண்டில், இவ்வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-பிப்-202022:14:50 IST Report Abuse
Suresh Ramaiya Mam, how its possible
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
11-பிப்-202019:24:54 IST Report Abuse
A.Gomathinayagam கடன் கொடுங்கள் என்று வங்கிகளை நிர்பகிக்கும் அரசு கடானளிகள் கடனை கட்ட வேண்டும் என அழுத்தம் கொடுப்பதில்லை
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-பிப்-202000:50:52 IST Report Abuse
தமிழவேல் அப்போ எப்புடி கல்லா கட்டுறது ?...
Rate this:
Cancel
Rajasekar D - Kudanthai,இந்தியா
11-பிப்-202013:29:32 IST Report Abuse
Rajasekar D நாம கடனே கொடுக்காமல் இருந்தா , வாரக் கடன் சுத்தமாக இருக்காது. அதனால் சிறு குறு வணிகர்களுக்கு கடனே கொடுக்காதீங்க. பெரு வணிகர்களுக்கு கொடுத்து விட்டு தள்ளுபடி பண்ணிடுங்க. ஹீ ஹீ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X