முதல்வர் அறிவிப்பு ; மத்திய அரசு முடிவென்ன?

Added : பிப் 10, 2020
Advertisement

''காவிரி டெல்டா பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக, மத்திய அரசு, தங்களது நிலைப்பாட்டை ஓரிரு நாட்களில் தெரிவிக்கும்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

நேற்று டில்லி வந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இருவரையும் சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பு குறித்து, அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: தமிழக முதல்வர் இ.பி.எஸ்., காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க அறிவிப்பை, மக்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.தமிழகமே மகிழ்ச்சியாக இருந்தாலும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மட்டும் கவலையிலும், அதிர்ச்சியிலும் உள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து, முதல்வர் அளித்த கடிதத்தை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் தந்தேன்.தமிழகத்தின் நிலைமையையும், மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த அந்த கடிதத்தைப் பெற்ற அமைச்சர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இரண்டொரு நாளில், நல்லதொரு பதிலை தெரிவிப்போம் என்றும் அவர்கள் கூறினர். இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் எடுக்கப் படுமா, இல்லையா என்ற குழப்பத்திற்குள் போக வேண்டாம். முதல்வர் அறிவிப்பு செய்துவிட்டால், அதுவே ஒரு கொள்கை முடிவு தான்.இவ்வாறு, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X