மதமாற்ற தடை சட்ட மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

Added : பிப் 10, 2020
Advertisement

புதுடில்லி : புதிதாக மதமாற்ற தடை சட்டம் இயற்றுமாறு, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ஒருவரை ஒரு மதத்தில் இருந்து வேறொரு மதத்திற்கு கட்டாயப் படுத்தியோ, கவர்ச்சிகர சலுகைகள் வழங்கியோ அல்லது மோசடியாகவோ மாற்றுவதை தடுக்க, தமிழக அரசு சிறப்பு மதமாற்ற தடை சட்டத்தை இயற்றுமாறு, மத்திய அரசு ஆணையிட வேண்டும். இந்த நடவடிக்கையை மேற்கொள்ள, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நேற்று இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X