சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வழக்கு பதிய மறுப்பு

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (9)
Advertisement
 ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வழக்கு பதிய மறுப்பு

சென்னை : 'அதிகார துஷ்பிரயோகம் செய்யும், கொலை மிரட்டல் விடுக்கும், ஐ.பி.எஸ்., அதிகாரியான என் கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்யாத போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெண் ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் அருணா, 27. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இவர் நேற்று அளித்துள்ள புகார்:எனக்கும், திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த ஆனந்த், 30, என்பவருக்கும், சென்னையில், 2017 ஆகஸ்ட், 23ல், இருவரது பெற்றோர் சம்மதத்துடன், திருமணம் நடந்தது. என் கணவர் கேரளாவில், ஐ.பி.எஸ்., அதிகாரியாக உள்ளார். அவர் தற்போது, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் பயிற்சி பெற்று வருகிறார்.

அவருக்கு, வரதட்சணையாக, 500 சவரன் நகை மற்றும் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் கார் வாங்கி கொடுத்தோம்.கூடுதலாக வரதட்சணை கேட்டு, என் கணவர் ஆனந்த், அவரது தாய் மலர்க்கொடி, தந்தை ராஜகுரு ஆகியோர் கொடுமைப்படுத்தினர். கணவர் ஐதராபாதிற்கு பயிற்சிக்கு சென்றதால், சென்னையில் உள்ள, பெற்றோர் வீட்டில் என்னை விட்டுச் சென்றார்.'நோட்டீஸ்'இந்நிலையில், திடீரென விவாகரத்து கோரி, கணவர், 'நோட்டீஸ்' அனுப்பினார். இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

எனக்கு நியாயம் வேண்டும் என, நானே வாதாடி வருகிறேன்.என் கணவர் ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதால், அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். அவரது பெற்றோருடன் சேர்ந்து, கொலை மிரட்டல் விடுக்கிறார். வரதட்சணை கொடுமை, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியது தொடர் பாக, கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது, சென்னை, தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்; நடவடிக்கை இல்லை. போராட்டம்இதுபற்றி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டேன். என் கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

என் கணவர் ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதால், தேனாம்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல், காலம் தாழ்த்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயம் கிடைக்கவில்லை என்றால், மெரினா கடற்கரையில், காந்தி சிலை முன் போராட்டம் நடத்தவும், எனக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-பிப்-202009:54:40 IST Report Abuse
ஆரூர் ரங் வரதட்சிணை கொடுப்பதும் தவறுதான் . அதற்கு என்ன தண்டனை? இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லையே
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
13-பிப்-202007:45:46 IST Report Abuse
Girija எல்லாம் கோட்டா செய்யும் வேலை சர்காரி பிராமின்
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
13-பிப்-202001:15:51 IST Report Abuse
Girija வாசகர்களே வகைதொகை இல்லாமல் கருது பதிவு செய்யதீர்கள். இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது , அதற்கு தீர்வு என்ன என்பதை கூறுங்கள். வரதட்சணை கொடுத்ததற்கு ஆதாரம் இருந்தால் நன்றாக இருக்கும். கார் கொடுத்துள்ளனர் அது ஒரு ஆதாரம். பாதிக்கப்பட்ட சகோதரிக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X