தயாநிதி பேச்சு சபையில் பரபரப்பு| Dinamalar

தயாநிதி பேச்சு சபையில் பரபரப்பு

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (2)
Share

புதுடில்லி : சமஸ்கிருத மொழி குறித்து, தி.மு.க., - எம்.பி., தயாநிதி, லோக்சபாவில் கூறிய கருத்து, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, பா.ஜ., உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

மத்திய பட்ஜெட் மீதான விவாதம், லோக்சபாவில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க., உறுப்பினர் தயாநிதி, ''இந்த பட்ஜெட்டில், சமஸ்கிருத மொழிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், செம்மொழியான தமிழ் மொழிக்கு, இந்த அரசு என்ன செய்துள்ளது,'' என, கேள்வி எழுப்பினார்.அதன் பின் அவர் கூறிய கருத்து, சமஸ்கிருத மொழியை இழிவுபடுத்துவதாக, உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 'தன் கருத்துக்கு தயாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பா.ஜ., உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தயாநிதியின் பேச்சு, சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X