பொது செய்தி

இந்தியா

மஹாபோதி கோவிலில் ராஜபக்சே தரிசனம்

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 மஹாபோதி கோவிலில் ராஜபக்சே தரிசனம்

கயா : இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே, நேற்று, பீஹார் மாநிலத்தில் உள்ள மஹாபோதி கோவிலில் தரிசனம் செய்தார்.

அண்டை நாடான இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, நம் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று டில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம், பீஹார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள மஹாபோதி கோவிலுக்கு வந்தார். பீஹார் விவசாய துறை அமைச்சர் பிரேம் குமார் மற்றும் அதிகாரிகள், அவரை வரவேற்றனர். இதன்பின் கோவிலுக்கு சென்ற ராஜபக்சே, தரிசனம் செய்தார். அரை மணி நேரத்துக்கு மேல் அங்கிருந்த ராஜபக்சே, பின் புறப்பட்டுச் சென்றார்.

கவுதம புத்தர் ஞானம் பெற்ற இடத்தில், இந்த மஹாபோதி கோவில் உள்ளது. சர்வதேச பாரம்பரிய சின்னமாக உள்ள இந்த கோவிலுக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்த மதத்தினர் யாத்திரை வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
11-பிப்-202009:16:48 IST Report Abuse
Loganathan Kuttuva புத்த மதத்தை சேர்ந்த இலங்கை பிரதமர் இந்து கோயில்களுக்கும் சென்று முறையாக வணங்குகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X