பொது செய்தி

இந்தியா

பிப்.13ல் சபரிமலை நடை திறப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

சபரிமலை : மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை பிப்.13 மாலை திறக்கப்படுகிறது. பிப் 18 இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும்.பிப்.13 மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுவார்.

18-ம் படி வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்த பின் மூலஸ்தானம் வருவார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.பிப்.14 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய் அபிேஷகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து தினமும் உஷபூஜை, உச்சபூஜை, களபாபிேஷகம், கலசாபிேஷகம், புஷ்பாபிேஷகம், அத்தாழபூஜை நடைபெறும். இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். பிப்.18 இரவு 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.மாசி முதல் தேதி தமிழக காலண்டர் படி பிப்., 13ம் தேதியும், கேரள முறைப்படி பிப்.14ம் தேதியும் வருகிறது. இதனால் நடை திறப்பில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X