சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையை கொன்ற தாய் கணவர், தந்தையுடன் கைது

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (7)
Advertisement
 குழந்தையை கொன்ற தாய்  கணவர், தந்தையுடன் கைது

காரியாபட்டி : குழந்தையை கொன்றால்தான் உன்னுடன் வாழ்வேன் என கணவன் கூறியதால் 11 மாத குழந்தையை கொன்ற தாய் உட்பட 5 பேரை காரியாபட்டி போலீசார் கைதுசெய்தனர்.

மதுரை மாவட்டம் திருமால் புதுப் பட்டியை சேர்ந்த சூசைமாணிக்கம் மகள் சுஷ்மிதா. 12ம் வகுப்பு படிக்கும் போதே கர்ப்பமானார். விசாரித்ததில் காரியாபட்டி அமல்ராஜை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் நெருங்கி பழகியதாகவும் தெரிவித்தார். இதைதொடர்ந்து அமல்ராஜை திருமணம் செய்தார். இந்நிலையில் சுஷ்மிதா இவரது அத்தை மகன் ராஜேஷ் உடன் உறவு வைத்து கொண்டது தெரிந்து அமல்ராஜ் கேட்க அதை ஒப்புக் கொண்டார்.

சில மாதங்களில் ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கூறிய அமல்ராஜ் சுஷ்மிதாவிடம் சண்டையிட்டு வந்தார். போலீசில் புகார் கொடுப்பதும், சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது.குழந்தையால் மன உளைச்சல் ஏற்படுவதாக கூறிய அமல்ராஜ், குழந்தையை கொன்றுவிட்டு வந்தால்தான் உன்னுடன் வாழ்வேன் என தெரிவித்தார். குழந்தையால் தன்னுடைய வாழ்க்கைக்கு ஆபத்து என கருதிய சுஷ்மிதா 11 மாத குழந்தை விகாஷை தண்ணீர் நிரப்பிய டப்பில் மூழ்கடித்து கொன்றுவிட்டு தவறி விழுந்ததாக கூறி நாடகமாடினார்.

சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணையில்குடும்பமே சேர்ந்து குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலமானது. சுஷ்மிதா, இவரது தந்தை சூசைமாணிக்கம், அமல்ராஜ், மரியலுாக்காஸ் மற்றும் விமலாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Sekar - mumbai ,இந்தியா
14-பிப்-202014:35:06 IST Report Abuse
Ram Sekar குமார் பொரியார் - உன்னோட பெரியார் சொன்ன கொள்கையை கடைபிடித்த பெண்ணல்லவா...
Rate this:
Share this comment
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
13-பிப்-202014:21:50 IST Report Abuse
Kumar periyaar இது போன்றவர்களுக்கு ஏன் இந்த RSS நல்ல புத்தி மதி சொல்லி ஹிந்து மதத்தை காப்பாற்ற முன்வருவதில்லை
Rate this:
Share this comment
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
13-பிப்-202022:51:09 IST Report Abuse
tamilvananஇவர்கள் பெயரில் இருந்து கிறித்தவர்கள் என்பது புரியவில்லையா? பெரியார் அல்லவா? உடனே ஆர் எஸ் எஸ்ஸை வம்புக்கு இழுக்கிறார்....
Rate this:
Share this comment
14-பிப்-202008:23:10 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஉனக்கு ஏன் ஹிந்து மதத்தின் மீது அவ்வளவு அக்கறை .....
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
14-பிப்-202019:45:41 IST Report Abuse
jaganசொரியார் சொல்படி நடக்கும் மக்களை ஏன் திருத்த வேண்டும் ? சொரியார் படி, இவர் நேர் வழியில் தான் செல்கிறார். நீங்க வேணா விசில் போடுங்க. எங்களுக்கு ஒரு குழந்தை இறந்தது வருத்தமளிக்கும் செயல், உங்களை போல் அல்லாமல்...
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-பிப்-202004:53:51 IST Report Abuse
 nicolethomsonபகுத்தறிவோம் என்று பேசும் மக்களே மகளை மணந்துகொண்டு அலைந்த இயக்கம் அல்லவா கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணுங்க பாஸ் அப்பதான் பகுத்தறிவது என்றால் என்னவென்று புரியும்...
Rate this:
Share this comment
Cancel
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
13-பிப்-202006:57:34 IST Report Abuse
Thalaivar Rasigan மனிதர்கள் விலங்குகளை காட்டிலும் கீழானவர்கள் என்பதை நிரூபித்து உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X