உணவுக்கூடம் அமைக்கும் வழக்கு மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம்

Added : பிப் 10, 2020
Advertisement

புதுடில்லி : 'சமுதாய உணவுக் கூடங்கள் அமைப்பது தொடர்பான விஷயத்தில் பதில் அளிக்காத மாநில அரசுகளுக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஆர்வலர்களான அனுான் தவான், இஷ்னன் தவான், கஞ்சனா சிங் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:பசி மற்றும் போதிய ஊட்டச் சத்தின்மை காரணமாக, நம் நாட்டில், ஒவ்வொரு நாளும் ஏராளமான பச்சிளம் குழந்தைகள் இறக்கின்றன; இது, மிக கொடுமையான விஷயம். நாட்டு மக்களுக்கு உணவையும், பாதுகாப்பான வாழ்வையும் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. எனவே, நாடு முழுவதும் சமுதாய உணவுக் கூடங்களை அமைக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகம், ஆந்திரா, உத்தரகண்ட், ஒடிசா, ஜார்க்கண்ட், டில்லி ஆகிய மாநிலங்களில் மிக குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன.

இதற்கான கூடங்கள், அந்த மாநிலங்களில் செயல்படுகின்றன. இதுபோல், நாடு முழுவதும் உணவுக் கூடங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து, மத்திய - மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். பஞ்சாப், நாகாலாந்து, கர்நாடகா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகளும், அந்தமான், ஜம்மு - காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேச அரசுகள் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பதில் மனு தாக்கல் செய்யாத மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், '24 மணி நேரத் தில் பதில் மனு தாக்கல் செய்யாத மாநில அரசுகளுக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X