சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவர் இருக்கையில் கணவரின், 'டிக் டாக்' அலம்பல்

Added : பிப் 10, 2020
Advertisement
 ஊராட்சி தலைவர் இருக்கையில் கணவரின், 'டிக் டாக்' அலம்பல்

திருப்பூர் : ஊராட்சி தலைவர் இருக்கையில் அமர்ந்து, அவரது கணவர், 'டிக் டாக்' செய்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியம், கவுண்டச்சிபுதுார் ஊராட்சி தலைவராக, செல்வி தேர்வு செய்யப்பட்டார். 'வாட்ஸ் ஆப்'பில் பதிவுஊராட்சி அலுவலகத்தில், தலைவர் இருக்கையில், அவரது கணவர் ரமேஷ் அமர்ந்து, 'டிக் டாக்' செய்வது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஊராட்சியைச் சேர்ந்த சிலர், திருப்பூர் கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில், 'ஊராட்சி தலைவர் இருக்கையில் அமர்ந்து, 'டிக் டாக்' செய்த அவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.ஊராட்சி செயலர் சுப்பிரமணியிடம் கேட்டபோது, ''ஊராட்சிக்கு புதிய பர்னிச்சர் வாங்கி வந்தபோது, தலைவரின் கணவர், அதில் அமர்ந்து பார்த்தார்.

அதை வீடியோ எடுத்து, 'வாட்ஸ் ஆப்'பில் பதிவிட்டார். ''இனி இதுபோன்ற தவறு நடக்காது என, அதிகாரிகளிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்,'' என, சப்பை கட்டு கட்டினார். உண்மை என்ன?சமூக வலைதளங்களில் பரவி வரும், டிக் டாக் வீடியோவில், தலைவரின் இருக்கையில் அமர்ந்துள்ள அவரின் கணவர், சினிமாவில் வரும் வசனத்தை பேசுகிறார். ரமேஷ் கூறுகையில், ''தலைவர் பதவியேற்பதற்கு முன், அவரது அறையில் உள்ள இருக்கையை சரிபார்த்து கொண்டிருந்தேன்.

''அப்போது, விளையாட்டுத்தனமாக, 'டிக் டாக்' வீடியோ எடுத்து விட்டேன். அது தவறுதான்,'' என்றார்.ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பாலசுப்ரமணியம், ''கவுண்டச்சிபுதுார் ஊராட்சி மக்கள் கொடுத்த மனு மீது, நேரில் விசாரணை நடத்தி, திருப்பூர் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்படும்,'' என்றார்.பஞ்சாயத்து தலைவர் மகன் மீது குற்றச்சாட்டுநாகை மாவட்டம், மோகனுார் ஊராட்சித் தலைவராக, சுயேச்சையாக போட்டியிட்ட வள்ளி, தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் மூன்று பேர் மற்றும் பொதுமக்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் பிரவின் நாயரிடம் அளித்த மனு:அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும், வள்ளியின் மகன் அருள்முருகன், மோகனுார் ஊராட்சி மன்றப் பணிகளை கவனித்து வருகிறார். குடியரசு தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்தில், அருள்முருகன் தீர்மானங்களை வாசித்து, பொதுமக்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், துாய்மை காவலர்கள் என, தற்காலிகமாக பணியாற்றி வந்த நால்வரை பணிநீக்கம் செய்துள்ளார். இது குறித்து, கீவளூர், பி.டி.ஓ.,விடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் சட்டத்திற்கு மாறாக, தேர்ந்தெடுக்கப்படாத ஊராட்சி மன்ற தலைவராக செயல்படும் ஆசிரியர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஊராட்சித் தலைவராக பணியாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X