சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கரகம் ஆடியபடி சாகசங்கள் செய்கிறேன்!

Added : பிப் 10, 2020
Advertisement
 கரகம் ஆடியபடி சாகசங்கள் செய்கிறேன்!

கரகம் ஆடியபடியே, ஆணிகள் மீது நிற்பது, ஒரு நிமிடத்தில், 225 சுற்றுகள் சுற்றுவது என, பல சாகசங்கள் செய்யும், கோவை மாவட்டம், தீத்திப்பாளையத்தை சேர்ந்த அனுஷாஸ்ரீ: பள்ளியில் படிக்கும் போதே, நாட்டுப் புற கலைகள் மீது ஆர்வம் வந்து விட்டது. அதனால், பள்ளி அளவில் நடந்த கலை நிகழ்ச்சிகளில், நாட்டுப்புற நடன பிரிவுகளில், அவ்வப்போது விளையாட்டாக பங்கேற்று வந்தேன். பின், அதில் அதிக ஆர்வம் ஏற்படலாயிற்று. கரகம் ஆடத் துவங்கினேன்.

ஏழாவது வகுப்பு படிக்கும் போதே, தலையில் கரகத்தை வைத்து தனியாக ஆட ஆரம்பித்து விட்டேன். பிளஸ் ௨ படித்த பிறகு, 'கிளாசிக்கல் டான்ஸ்' பாடத்தில், டிப்ளமா கோர்ஸ் படித்தேன்.அதன் பின், முழு மூச்சாக, கிராமியக் கலைகளை செய்யத்துவங்கினேன். அதிலேயே, சாகசங்களையும் நிகழ்த்த ஆரம்பித்து விட்டேன்.கரகம், பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பம், கட்டைக்கால் ஆட்டம், சாகச நடனம் போன்ற கலைகளை கற்றேன்.மேலும், கரகம் ஆடியவாறு, கண்ணாடி துண்டுகள் மீது நடப்பது; 16 நிமிடத்தில், 35 பொருட்களை வைத்து சாகசம் செய்தல்; ஆணிகள் மீது பல மணி நேரம் நிற்பது என, பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன்.

இந்த சாகசங்கள் பண்ணும் போது, பல முறை தீக்காயம் ஏற்பட்டுள்ளது; தலை முடி கருகியிருக்கிறது; உடல் முழுவதும் நெருப்பு பற்றியிருக்கிறது. அந்த நேரங்களில், சுற்றி இருந்தவர்கள், என்னை காப்பாற்றி இருக்காங்க. எந்நேரமும் என் அம்மா ஜெயந்தி தான், எனக்கு பாதுகாப்பாக இருப்பாங்க.இப்படி பல ஆபத்துகளை எதிர்கொண்டு தான், மக்களின் பார்வையை, நாட்டுப்புற கலைகள் மீது திருப்ப முடிகிறது. அந்த அளவுக்குத் தான், இந்த கலைகளை மக்கள் ரசிக்கின்றனர். இதனால், நம் மாநில நாட்டுப் புற கலைகளை, இந்தியா முழுவதும் இன்றி, உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் என் குறிக்கோள். அதற்காக, சாகசங்களை விதவிதமாக மேற்கொள்கிறேன்.

ஆணிகள், உருளை, தட்டு, பித்தளைக் குடம், பாட்டில் போன்றவற்றின் மீது நின்றபடி, சாகசம் செய்வது; கண் இமைகள் மூலம் ஊசியை எடுப்பது; படுத்தபடியும், உட்கார்ந்தபடியும் புடவை கட்டுவது போன்றவற்றை, கரகம் ஆடியபடியே செய்வேன். நெருப்பு சாகசங்கள், ரிங் சுற்றுதல் போன்றவற்றை, பரதம் ஆடியபடியே செய்வேன். நம் நாடு மற்றும் வெளிநாடுகள் என, 2,500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை செய்து உள்ளேன். இந்த சாகச நடனத்தை, மக்கள் அங்கீகரிக்கும் கலையாக பிரபலப்படுத்த வேண்டும் என்பது தான் என் எண்ணம். இதற்காக, என் படிப்பு, சந்தோஷங்களை கூட இழந்து விட்டேன்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X