கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொறியாளர்கள் சொத்து வெளியிட கோரி வழக்கு

Added : பிப் 10, 2020
Advertisement

மதுரை : நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களின் சொத்து, வங்கி கணக்கு விபரங்களை வெளியிட கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி, சுந்தரவேல் தாக்கல் செய்த பொதுநல மனு:திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் முதல் பாபநாசம் வரை, சாலை மோசமாக உள்ளது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோல், மாவட்டத்தின் பல பகுதிகளில், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.தரமற்ற சாலை அமைக்க காரணமாக இருந்ததற்காக, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள், அரசியல்வாதிகளை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.சேரன்மாதேவி - தாமிரபரணி ஆற்றில், புது பாலம் அமைத்த, ஏழு ஆண்டுகளுக்குள் பழுதடைந்துள்ளது. இப்பாலத்திற்கான இணைப்புச் சாலையை, வளைவாக அமைத்துள்ளதால் விபத்து ஏற்படுகிறது.

மதுரை ரிங் ரோடு விரகனுார் ரயில்வே மேம்பாலம் அருகே, வளைவாக சாலை அமைத்துள்ளனர். நேர் வழியில் சாலை அமைக்க, போதிய நிலம் உள்ளது. சிலருக்கு சாதகமாக, நெடுஞ்சாலைத் துறையினர் செயல்பட்டுள்ளனர்.சாலையை நேராக அமைக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களின் சொத்து, வங்கி கணக்கு விபரங்களை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதை ஊடகங்களில் வெளியிட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார். நீதிபதிகள், எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு, தமிழக நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, நான்கு வாரங்கள் ஒத்தி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X