பா.ஜ., -- எம்.பி.,க்கள் மீண்டும் சர்ச்சை பேச்சு

Added : பிப் 10, 2020
Advertisement

அலிகார் : உருது பெண் கவிஞர் மகளை, பாகிஸ்தான் செல்லும் படியும், மக்களின் உடையை பார்த்து நாட்டின் பொருளாதாரத்தை அறிந்து கொள்ளலாம் என்றும், பா.ஜ., - எம்.பி.,க்களின் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

உத்தர பிரதேச மாநிலம், அலிகாரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், முன்னணி உருது கவிஞர் முனாவ்வர் ராணாவின் மகளும், சமூக ஆர்வலருமான சுமையா ராணா பேசுகையில், ''குடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நசுக்கும் வகையில், உ.பி., அரசு, போலீசார் உதவியுடன் அடக்குமுறையை கையாள்கிறது. ''இதனால் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாத இறுக்கமான நிலை உள்ளது,'' என்றார்.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், அலிகார் தொகுதி பா.ஜ., - எம்.பி., சதீஷ் கவுதம் கூறியதாவது:சுமையா ராணா, நம் நாட்டில் சுதந்திரமாக இருக்க முடியாத நிலையை உணர்ந்தால், அவர் பாகிஸ்தானுக்கு செல்லட்டும்.அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களில், ௧௫௦ பேர் மட்டும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்; மற்றவர்கள் வகுப்புகளுக்கு திரும்பியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், அடுத்த கல்வியாண்டில் கல்லுாரியில் இருக்க மாட்டார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதே போல, உத்தர பிரதேசத்தின், பல்லியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., -- எம்.பி., வீரேந்திர சிங் மாஸ்ட் பேச்சும் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. அந்த நிகழ்ச்சியில், பேசிய வீரேந்திர சிங் மாஸ்ட், 'உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருந்தாலும், இந்தியா அதில் பாதிக்கப்படவில்லை என்பதை, நாம் அணியும் உடைகளில் இருந்து அறியலாம்' என்று கூறினார். ''பொருளாதார மந்த நிலை இருந்தால், வேட்டி - குர்தாவுடன் தான் இருந்திருப்போம்; இப்போது போல, கோட், ஜாக்கெட் அணிந்திருக்க மாட்டோம். ''நம் நாட்டில், 6.5 லட்சம் கிராமங்கள் உள்ளன. வங்கிகளில், டிபாசிட் செய்யப்படும் பணத்தில் பெருமளவு, கிராம மக்களுக்கு சொந்தமானது,'' என்றும், அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X