கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு கொலை வழக்கு முக்கிய சாட்சியிடம் விசாரணை

Added : பிப் 10, 2020
Advertisement
 கோடநாடு கொலை வழக்கு முக்கிய சாட்சியிடம் விசாரணை

ஊட்டி : கோடநாடு கொலை வழக்கு விசாரணையில், முக்கிய சாட்சியிடம், இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது; முக்கிய குற்றவாளிகளை, அவர் அடையாளம் காட்டினார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, நேற்று நடந்தது.வழக்கில் தொடர்புடைய, ஒன்பது குற்றவாளிகள் ஆஜராகினர். குற்றவாளி ஜம்சீர் அலி, உடல் நலம் சரியில்லாததால் ஆஜராகவில்லை.முக்கிய சாட்சியான, கிருஷ்ண பகதுார், நேற்று, கோர்ட்டில் ஆஜரானார். இவரிடம் சாட்சி விசாரணை நடந்தது.அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் கேட்க, ஹிந்தி தெரிந்த மொழி பெயர்ப்பாளர் மூலம், கிருஷ்ண பகதுார் கூறிய தகவல்களை, நீதிபதி வடமலை பதிவு செய்தார்.

மீண்டும் மாலை, 3:40 மணிக்கு, சாட்சி விசாரணை துவங்கி, 4:35 மணி வரை நடந்தது. அப்போது, கிருஷ்ண பகதுாரை கட்டி போட்டவர்களை, நீதிபதி அடையாளம் காட்ட சொன்னார்.அப்போது சயான், வாளையார் மனோஜ், திபு, பிஜின் குட்டி, உதயகுமார் ஆகியோரை, அவர் அடையாளம் காட்டினார்.நான்காவது சாட்சியான யோகநாதனிடம், 20 நிமிடம் விசாரிக்கப்பட்டது. கோவை சிறையில் உள்ள சயான், வாளையார் மனோஜ் ஏற்கனவே, ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையை பிப்., 20 ம் தேதிக்கு ஒத்தி வைத்தி நீதிபதி வடமலை உத்தரவிட்டார். 103 பேரிடம் விசாரணைஇந்த வழக்கில், மொத்தம், 103 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதுவரை, நான்கு சாட்சிகளிடம் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. இனி, ஒவ்வொரு வாய்தாவிலும், ஐந்து சாட்சிகளிடம் விசாரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் குற்றவாளிகள் தரப்பில், அவரது வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்த உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X