சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையை கொன்று நாடகமாடிய தாய் ; தந்தை, கணவர் உட்பட 5 பேர் கைது

Added : பிப் 10, 2020
Advertisement

காரியாபட்டி : 'குழந்தையை கொன்றால் தான், உன்னுடன் வாழ்வேன்' என, கணவன் கூறியதால், 11 மாத குழந்தையை கொன்ற தாய் உட்பட, ஐந்து பேரை, காரியாபட்டி போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்த, சூசைமாணிக்கம் மகள் சுஷ்மிதா. பிளஸ் 2 படிக்கும் போதே, கர்ப்பமானார். விசாரித்ததில், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த அமல்ராஜை காதலிப்பதாகவும், அதனால், நெருங்கி பழகியதாகவும் தெரிவித்தார்.இதைதொடர்ந்து, இருவருக்கும் திருமணம் நடந்தது.இந்நிலையில் சுஷ்மிதா, அவரது அத்தை மகன் ராஜேஷ் உடன், கள்ளதொடர்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமல்ராஜ் கேட்டபோது, அதை சுஷ்மிதா ஒப்புக் கொண்டார். சில மாதங்களில், ஆண் குழந்தை பிறந்தது.இக்குழந்தை தனக்கு பிறக்கவில்லை என, அமல்ராஜ், அவ்வப்போது, சுஷ்மிதாவிடம் சண்டையிட்டு வந்தார். போலீசில் புகார் கொடுப்பதும், பின், சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது.குழந்தையால் மன உளைச்சல் ஏற்படுவதாக கூறிய அமல்ராஜ், 'குழந்தையை கொன்றால் தான், உன்னுடன் வாழ்வேன்' என, தெரிவித்தார்.

குழந்தையால், தன் வாழ்க்கைக்கு ஆபத்து எனக் கருதிய, சுஷ்மிதா, 11 மாத குழந்தை விகாஷை, தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் மூழ்கடித்து கொன்றார். பின், தண்ணீரில் தவறி விழுந்து, குழந்தை இறந்ததாகக் கூறி, நாடகமாடினார்.போலீசார் தீவிர விசாரணையில், குடும்பமே சேர்ந்து, குழந்தையை கொன்று, நாடகமாடியது அம்பலமானது.சுஷ்மிதா, சூசைமாணிக்கம், அமல்ராஜ், அவரது பெற்றோர் மரியலுாக்காஸ், விமலா ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X