ஓய்வூதிய செலவை குறைக்க பங்களாவுக்கு பதில், பிளாட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஓய்வூதிய செலவை குறைக்க பங்களாவுக்கு பதில், 'பிளாட்'

Added : பிப் 10, 2020
Share
புதுடில்லி : ராணுவ ஓய்வூதியச் செலவை குறைப்பது, உயரதிகாரிகள் வசிக்கும் பங்களாக்களை 'பிளாட்' ஆக மாற்றுவது உட்பட, பல்வேறு சீர்திருத்தங்கள் தொடர்பாக, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பரிசீலித்து வருகிறார். இது குறித்து, ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2010ல், ராணுவத்தின் ஓய்வூதியச் செலவு, 41ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 'ஒரு பதவி; ஒரு ஓய்வூதியம்'

புதுடில்லி : ராணுவ ஓய்வூதியச் செலவை குறைப்பது, உயரதிகாரிகள் வசிக்கும் பங்களாக்களை 'பிளாட்' ஆக மாற்றுவது உட்பட, பல்வேறு சீர்திருத்தங்கள் தொடர்பாக, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பரிசீலித்து வருகிறார்.

இது குறித்து, ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2010ல், ராணுவத்தின் ஓய்வூதியச் செலவு, 41ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 'ஒரு பதவி; ஒரு ஓய்வூதியம்' திட்டம் அமலுக்கு வந்த பின் அதிகரித்துள்ளது. நடப்பு, 2019 - -20ம் நிதியாண்டில், ஓய்வூதியச் செலவு, 1.13 லட்சம் கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வூதியச் செலவை குறைக்கும் வகையில், ராணுவத்தில் போர் வீரர்கள் தவிர்த்து, இதர பிரிவுகளில் பணியாற்றுவோர் ஓய்வு பெறும் வயதை, 39 லிருந்து, 58 ஆக, படிப்படியாக உயர்த்துவது குறித்து, முப்படை தளபதிகளுடன், பிபின் ராவத் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தவகையில், 4 லட்சம் பேர் ஓய்வு பெறும் வதை உயர்த்துவதன் மூலம், ஓராண்டில் 4ஆயிரம் கோடி ரூபாய் ஓய்வூதியச் செலவு மிச்சமாகும் என, கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, ராணுவ உயரதிகாரிகள் வசிக்க, வசதியான பங்களாக்கள் ஒதுக்கப்படுகின்றன. இனி, ராணுவம் வரையறுத்தபடி கட்டப்பட உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில், உயரதிகாரிகளுக்கு 'பிளாட்' ஒதுக்கப்படும்.இதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்ற, பொது துறை நிறுவனங்களுக்கு, ராணுவ கன்டோன்மென்ட் நிலங்களை ஒதுக்குவதன் மூலம் நிதி திரட்டப்படும்.

இந்தவகையில், அடுத்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில், 35ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டில் விமானம் தாங்கி கப்பல், நீர்மூழ்கி கப்பல், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் தயாரிப்பை ஊக்குவிக்கவும், பிபின் ராவத் திட்டமிட்டுள்ளார். இந்தாண்டு இறுதிக்குள், புதிய 'ஐ.என்.எஸ்., விக்ரந்த்' விமானம் தாங்கி போர் கப்பல், பரிசோதனைக்கு தயாராகி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X