சிறுவனுக்கு ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை; அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவனுக்கு ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை; அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சாதனை

Added : பிப் 10, 2020
Share

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிறுவனின் கையில் அறுந்த தசை நரம்புகள், ரத்தக் குழாய்களை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் இணைத்து டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் அருள் பிரகாஷ், 17; இவரது தந்தை இறந்து விட்டார். இதனால் இவர் மரம் அறுக்கும் கூலித்தொழில் செய்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி இவரது வீட்டின் அருகே உள்ள மரத்தை பெட்ரோல் மிஷன் மூலம் இயங்கும் இயந்திரத்தைக் கொண்டு அறுத்த போது, எதிர்பாராத விதமாக மிஷன் சிறுவனின் வலது கையில் பட்டு தசை மற்றும் நரம்புகள் ரத்தக்குழாய்கள் துண்டாகியது.கை எலும்பு மட்டும் ஒட்டியிருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லுாரி முதல்வர் டீன் குந்தவிதேவி ஆலோசனையின் பேரில் சிறுவன் அருள்பிரகாஷிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் ராஜா தலைமையில் மயக்கவியல் துறை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் மற்றும் லேப் டெக்னீஷியன், மருத்துவ செவிலியர்கள் கொண்ட குழுவினர் 5 மணி நேரம் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து தசை நரம்புகள், ரத்தக் குழாய்களை இணைத்தனர். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த அருள் பிரகாஷின் கைகள் நல்ல நிலையில் உள்ளது. தற்போது, வீட்டிலிருந்தே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து கல்லுாரி முதல்வர் டீன் குந்தவிதேவி நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த அருள் பிரகாஷ் கையில் நரம்புகள், ரத்த நாளங்கள் துண்டித்து எலும்பு மட்டும் இருந்த நிலையில் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினரால் சிறுவனின் கை சரியாகி மறு வாழ்வு கிடைத்துள்ளது.இது போன்ற அறுவை சிகிச்சைகள் வெளியே தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் 2 லட்சம் ரூபாய் வரை செல வாகும். ஆனால், மருத்துவமனையில் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டது. சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு டீன் குந்தவி தேவி கூறினார்.மருத்துவ கண்காணிப்பாளர் சுப்ரமணியன், ஆர்.எம்.ஓ., சாந்தி, துறை தலைவர்கள் மோகனவேல், முருகேசன், இணை பேராசிரியர் ரவிக்குமார் மற்றும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X