பொது செய்தி

தமிழ்நாடு

'டுபாக்கூர்' நிருபர்கள் அலம்பல்; எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா?

Added : பிப் 10, 2020
Advertisement

மரக்காணம் : கோட்டக்குப்பம் உட்கோட்ட காவல் நிலையங்களில் 'டுபாக்கூர்' நிருபர்களால் போலீசார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டக்குப்பம் உட்கோட்டத்திற்குட்பட்ட மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில், வானுார், கிளியனுார் மற்றும் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையங்களில், கிரைம் செய்திகள் தொடர்பாக பத்திரிகையாளர்கள் நேரிலோ அல்லது தொலை பேசி வழியாகவே செய்திகளை கேட்டு வெளியிட்டு வருகின்றனர்.கடந்த ஒரு ஆண்டாக 20க்கும் மேற்பட்ட 'டுபாக்கூர்' நிருபர்கள் காவல் நிலையத்தில் உள்ள சில காவலர்களை சரிகட்டி காலையில் இருந்து இரவு வரை காவல் நிலையத்தில் முகாமிட்டு வருகின்றனர்.

இவர்கள், புகார் கொடுக்க வரும் நபர்களிடம் தன்னை முன்னணி பத்திரிகை நிருபர் எனவும், உங்கள் புகார் மீது காவல்துறையில் நடவடிக்கை எடுக்க வைப்பதாக கூறி ஒரு தொகையை பெற்றுக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளின் முன் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு போலீசார் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் அவர்களைப்பற்றி அவதுாறாக செய்தி போட்டு விடுவேன் என மிரட்டல் விட்டுகின்றனர்.

மேலும் இவர்கள், வரும் வாகனங்களில் 'பிரஸ்' மற்றும் 'மீடியா' என கொட்டை எழுத்திலும் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் 'ஜி' எழுத்துக்களையும் முன்பகுதி, பின் பகுதி நெம்பர் பிளேட்டுகளில் எழுதி வைத்துள்ளனர். இவர்களாகவே ஒரு அடையாள அட்டையை தயார் செய்து வைத்துள்ளனர்.

இதனால் முன்னணி பத்திரிகை நிருபர்கள் செய்தி சேகரிக்க காவல் நிலையம் வருவதற்கே அச்சப்படுகின்றனர். மதுவிலக்கு காவல்துறை மற்றும் சோதனைச் சாவடிகளில், நான் இந்த பகுதி நிருபர் எனக்கூறி மிரட்டல் விடுத்து மதுபாட்டில்களை கேட்பதாக போலீசார் புலம்பி வருகின்றனர்.இது குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசார் எதிர்பார்க்கின் றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X