பொது செய்தி

தமிழ்நாடு

குறைகிறது பெரியாறு அணை நீர்மட்டம் ; தேனி, மதுரை குடிநீருக்கு சிக்கல்

Added : பிப் 10, 2020
Advertisement

கூடலூர் : பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் தேனி, மதுரை மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் தமிழகப்பகுதிக்கு நீர் திறப்பு வினாடிக்கு 256 கன அடியாக குறைக்கப்பட்டது.

பெரியாறு அணை நீர்பிடிப்பில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடுமையான வெப்பம் நிலவி வருவதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 116.35 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 1970 மில்லியன் கன அடியாகும்.தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில் தேனி மதுரை மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. அணையில் 108 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை மட்டுமே தமிழகப் பகுதிக்கு திறக்க முடியும்.

வழக்கமாக கோடைமழை பெய்தாலும் நீர்மட்டம் உயராது. இனி ஜூனில் துவங்கும் தென்மேற்கு பருவமழையால் மட்டுமே அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. அதுவரை 4 மாதங்களுக்கு குடிநீர் தேவை உள்ளதால் திறக்கப்பட்டிருந்த 300 கனஅடி நீர் 256 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பணித் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X