ராமேஸ்வரத்தில் தந்தை, மகன் மர்மச்சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் தந்தை, மகன் மர்மச்சாவு

Added : பிப் 10, 2020
Share

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் தந்தையும் ஏழு வயது மகனும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் தண்ணீருக்குள் இறந்து கிடந்தனர்.

ராமேஸ்வரம் சுடுகாட்டன்பட்டியை சேர்ந்தவர் மலைராஜன் 55. இவரது மனைவி மாரீஸ்வரி மகன் இளையராஜா 7. அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்தார். போதைக்கு அடிமையான மலைராஜன் மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவார். அப்போது மகனை அழைத்துக் கொண்டு ராமேஸ்வரம் ஸ்ரீராம் நகரில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்று தங்கி விட்டு ஓரிரு நாட்களுக்கு பிறகு வீடு திரும்புவது வழக்கம். மூன்று நாட்களுக்கு முன்பு மனைவியுடன் சண்டையிட்டு மகனை அழைத்து சென்ற மலைராஜன் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று சுடுகாட்டன்பட்டி அருகே உள்ள தரவையில் தந்தை மகன் இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தண்ணீரில் இறந்து கிடந்தனர்.போதையில் இருந்த மலைராஜன் மகன் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தாரா அல்லது மர்ம நபர்கள் கொலை செய்தனரா என டவுன் போலீஸ் எஸ்.ஐ. சதீஷ்குமார் விசாரிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X