பொது செய்தி

தமிழ்நாடு

10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை; பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த தொழிலாளர்கள் கவலை

Added : பிப் 10, 2020
Advertisement

திண்டிவனம் : கடலுார் கோட்டத்தில் பணிபுரியும் பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளதால் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின், தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால், விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக மாத சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதே போல் பி.எஸ்.என்.எல்., கடலுார் பொது மேலாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் 250க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதால், ஊழியர்களின் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், வேலை செய்தால் சம்பளம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் கிடைக்காது. ஒப்பந்த ஊழியர்கள், கேபிள் ஒர்க், கேபிள் பழுதை சரி செய்வது, டெலிபோன் இணைப்பு பழுததை சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர்.

தொடர்ந்து 10 மாதங்களாக சம்பளம் வழங்காமல் இருப்பது குறித்து, பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் திண்டிவனம் கிளைச் செயலர் துரைசாமி கூறுகையில், 'சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதை எதிர்த்து, ஐகோர்ட்டில் தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், வரும் 28ம் தேதிக்குள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பள பாக்கியில், 30 சதவீத தொகையை வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் நிலுவை தொகையை முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X