சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி மதுபாட்டில் கடத்தல்

Added : பிப் 10, 2020
Advertisement

விழுப்புரம் : ேஷர் ஆட்டோ மற்றும் பஸ்சில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ேஷர் ஆட்டோவில், புதுச்சேரி மதுபாட்டில் கடத்துவதாக மத்திய புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, மத்திய புலனாய்வு பிரிவு ஏட்டு குமரன் ஆகியோர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி மாநிலத்திலிருந்து 500 மதுபாட்டில்கள் கடத்தி வந்த ேஷர் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மதுபாட்டில் கடத்திய விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 35; என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மலையரசன்குப்பம் மாதவன் மனைவி பூங்கொடி, முகையூர் ராஜ் மனைவி எலிசபெத் ஆகியோரை தேடி வருகின்றனர்.இதேபோன்று, பஸ்சில் மதுபாட்டில் கடத்திய கண்டாச்சிபுரம் தாலுகா வீரசோழபுரம் கிருஷ்ணன் மனைவி தங்கேஸ்வரி, 45; என்பவரை கோலியனுார் கூட்ரோட்டில் போலீசார் கைது செய்து, 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X